++++++++++...Jesus Songs...++++++++++

Monday, March 30, 2009

March 31 [ மத்தேயு Matthew 16 : 17 - 20 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* And Jesus answered and said unto him, Blessed art thou, Simon Barjona: for flesh and blood hath not revealed it unto thee, but my Father which is in heaven.

* And I say also unto thee, That thou art Peter, and upon this rock I will build my church; and the gates of hell shall not prevail against it.

* And I will give unto thee the keys of the kingdom of heaven: and whatsoever thou shalt bind on earth shall be bound in heaven: and whatsoever thou shalt loose on earth shall be loosed in heaven.

* Then charged he his disciples that they should tell no man that he was Jesus the Christ. [Matthew 16 : 17 - 20]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

* மேலும், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

* பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

* அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். [மத்தேயு 16 : 17 - 20]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Sunday, March 29, 2009

March 30 [ மத்தேயு Matthew 16 : 13 - 16 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* When Jesus came into the coasts of Caesarea Philippi, he asked his disciples, saying, Whom do men say that I the Son of man am?

* And they said, Some say that thou art John the Baptist: some, Elias; and others, Jeremias, or one of the prophets.

* He saith unto them, But whom say ye that I am?

* And Simon Peter answered and said, Thou art the Christ, the Son of the living God.[ Matthew 16:13-16 ]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்த போது, தம்முடைய சீஷரை நோக்கி; மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

* அதற்கு அவர்கள்; சிலர் உம்மை யோவான்ஸ்நானகர் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

* அப்பொழுது அவர்; நீங்கள் என்னை யார் என்றுச் சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.

* சீமோன் பேதுரு பிரதியுத்தமாக; நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். [ மத்தேயு 16:13-16 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Saturday, March 28, 2009

March 29 [ மத்தேயு Matthew 16 : 09 - 12 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* Do ye not yet understand, neither remember the five loaves of the five thousand, and how many baskets ye took up?

* Neither the seven loaves of the four thousand, and how many baskets ye took up?

* How is it that ye do not understand that I spake it not to you concerning bread, that ye should beware of the leaven of the Pharisees and of the Sadducees?

* Then understood they how that he bade them not beware of the leaven of bread, but of the doctrine of the Pharisees and of the Sadducees.[ Matthew 16:9-12 ]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* இன்னும் நீங்கள் உணரவில்லையா.? ஐந்து அப்பங்களை ஐய்யாயிரம் பேருக்கு பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்;

* ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்கு பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்; நீங்கள் நினைவு கூராமலிருக்கிறீர்களா..?

* பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

* அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக் குறித்தே அப்படி சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள். [ மத்தேயு 16:9-12 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Friday, March 27, 2009

March 28 [ மத்தேயு Matthew 16 : 05 - 08]

'
IN English :-
''''''''''''''''''''''"

* And when his disciples were come to the other side, they had forgotten to take bread.

* Then Jesus said unto them, Take heed and beware of the leaven of the Pharisees and of the Sadducees.

* And they reasoned among themselves, saying, It is because we have taken no bread.

* Which when Jesus perceived, he said unto them, O ye of little faith, why reason ye among yourselves, because ye have brought no bread? [Matthew 16 : 05 - 08]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.

* இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.

* நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.

* இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன? [மத்தேயு 16 : 05 - 08]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Thursday, March 26, 2009

March 27 [ மத்தேயு Matthew 16 : 01 - 04 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* The Pharisees also with the Sadducees came, and tempting desired him that he would shew them a sign from heaven.

* He answered and said unto them, When it is evening, ye say, It will be fair weather: for the sky is red.

* And in the morning, It will be foul weather to day: for the sky is red and lowring. O ye hypocrites, ye can discern the face of the sky; but can ye not discern the signs of the times?

* A wicked and adulterous generation seeketh after a sign; and there shall no sign be given unto it, but the sign of the prophet Jonas. And he left them, and departed. [ Matthew 16:01-04 ]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* பரிசேயரும் சதுசேயரும் அவரை சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து; வானத்திலிருந்து ஓர் அடையாளத்தை தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்,

* அவர்களுக்கு அவர் பிரதியுத்தமாக; அஸ்தமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்.

* உதயமாகிறபோது, செவ்வானம் மந்தாரமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள், மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்கு தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா ?

* இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்கு கொடுக்கபடுவதில்லை என்று சொல்லி அவர்களை விட்டுப் புறப்பட்டுபோனார். [ மத்தேயு 16:01-04 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Wednesday, March 25, 2009

March 26 [ மத்தேயு Matthew 15 : 36 - 39]

'
IN English :-
''''''''''''''''''''''"

* And he took the seven loaves and the fishes, and gave thanks, and brake them, and gave to his disciples, and the disciples to the multitude.

* And they did all eat, and were filled: and they took up of the broken meat that was left seven baskets full.

* And they that did eat were four thousand men, beside women and children.

* And he sent away the multitude, and took ship, and came into the coasts of Magdala. [ Matthew 15:36-39 ]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.

* எல்லாரும் சாப்பிட்டுத் திருப்த்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.

* ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர,சாப்பிட்ட புருஷர் நாலாயிரம் பேராயிருந்தார்கள்.

* அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார். [ மத்தேயு 15:36-39 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Tuesday, March 24, 2009

March 25 [ மத்தேயு Matthew 15 : 32 - 35]

'
IN English :-
''''''''''''''''''''''"

* Then Jesus called his disciples unto him, and said, I have compassion on the multitude, because they continue with me now three days, and have nothing to eat: and I will not send them away fasting, lest they faint in the way.

* And his disciples say unto him, Whence should we have so much bread in the wilderness, as to fill so great a multitude?

* And Jesus saith unto them, How many loaves have ye? And they said, Seven, and a few little fishes.

* And he commanded the multitude to sit down on the ground.[ Matthew 15:32-35 ]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து; ஜனங்களுக்காக பரிதவிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.

* அதற்கு அவருடைய சீஷர்கள்; இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.

* அதற்கு இயேசு; உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்,

* அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,[ மத்தேயு 15:32-35 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Monday, March 23, 2009

March 24 [ மத்தேயு Matthew 15 : 30 - 31]

'
IN English :-
''''''''''''''''''''''"

* And great multitudes came unto him, having with them those that were lame, blind, dumb, maimed, and many others, and cast them down at Jesus' feet; and he healed them:

* Insomuch that the multitude wondered, when they saw the dumb to speak, the maimed to be whole, the lame to walk, and the blind to see: and they glorified the God of Israel. [ Matthew 15:30-31 ]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அப்பொழுது, சப்பாணிகள், குருடர்கள், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தமாக்கினார்.

* ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள் [ மத்தேயு 15:30-31 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Sunday, March 22, 2009

March 23 [ மத்தேயு Matthew 15 : 25 - 29]

'
IN English :-
''''''''''''''''''''''"

* Then came she and worshipped him, saying, Lord, help me.

* But he answered and said, It is not meet to take the children's bread, and to cast it to dogs.

* And she said, Truth, Lord: yet the dogs eat of the crumbs which fall from their masters' table.

* Then Jesus answered and said unto her, O woman, great is thy faith: be it unto thee even as thou wilt. And her daughter was made whole from that very hour.

* And Jesus departed from thence, and came nigh unto the sea of Galilee; and went up into a mountain, and sat down there. [Matthew 15 : 25 - 29]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள்.

* அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

* அதற்க்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

* இயேசு அவளுக்கு பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

* இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். [மத்தேயு 15 : 25 - 29]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Saturday, March 21, 2009

March 22 [ மத்தேயு Matthew 15 : 21 - 24]

'
IN English :-
''''''''''''''''''''''"

* Then Jesus went thence, and departed into the coasts of Tyre and Sidon.

* And, behold, a woman of Canaan came out of the same coasts, and cried unto him, saying, Have mercy on me, O Lord, thou Son of David; my daughter is grievously vexed with a devil.

* But he answered her not a word. And his disciples came and besought him, saying, Send her away; for she crieth after us.

* But he answered and said, I am not sent but unto the lost sheep of the house of Israel. [Matthew 15 : 21 - 24]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.

* அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

* அவளுக்கு பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

* அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். [மத்தேயு 15 : 21 - 24]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Friday, March 20, 2009

March 21 [ மத்தேயு Matthew 15 : 16 - 20]

'
IN English :-
''''''''''''''''''''''"

* And Jesus said, Are ye also yet without understanding?

* Do not ye yet understand, that whatsoever entereth in at the mouth goeth into the belly, and is cast out into the draught?

* But those things which proceed out of the mouth come forth from the heart; and they defile the man.

* For out of the heart proceed evil thoughts, murders, adulteries, fornications, thefts, false witness, blasphemies:

* These are the things which defile a man: but to eat with unwashen hands defileth not a man. [Matthew 15 : 16 - 20]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?

* வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?

* வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

* எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

* இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும், கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார். [மத்தேயு 15 : 16 - 20]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Thursday, March 19, 2009

March 20 [ மத்தேயு Matthew 15 : 12 - 15]

'
IN English :-
''''''''''''''''''''''"

* Then came his disciples, and said unto him, Knowest thou that the Pharisees were offended, after they heard this saying?

* But he answered and said, Every plant, which my heavenly Father hath not planted, shall be rooted up.

* Let them alone: they be blind leaders of the blind. And if the blind lead the blind, both shall fall into the ditch.

* Then answered Peter and said unto him, Declare unto us this parable. [Matthew 15 : 12 - 15]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.

* அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.

* அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடருக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.

* அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை வெளிப்படுத்தவேண்டும் என்றான். [மத்தேயு 15 : 12 - 15]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Wednesday, March 18, 2009

March 19 [ மத்தேயு Matthew 15 : 09 - 11]

'
IN English :-
''''''''''''''''''''''"

* But in vain they do worship me, teaching for doctrines the commandments of men.

* And he called the multitude, and said unto them, Hear, and understand:

* Not that which goeth into the mouth defileth a man; but that which cometh out of the mouth, this defileth a man. [Matthew 15 : 09 - 11]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

* பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.

* வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். [மத்தேயு 15 : 09 - 11]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Tuesday, March 17, 2009

March 18 [ மத்தேயு Matthew 15 : 05 - 08]

'
IN English :-
''''''''''''''''''''''"

* But ye say, Whosoever shall say to his father or his mother, It is a gift, by whatsoever thou mightest be profited by me;

* And honour not his father or his mother, he shall be free. Thus have ye made the commandment of God of none effect by your tradition.

* Ye hypocrites, well did Esaias prophesy of you, saying,

* This people draweth nigh unto me with their mouth, and honoureth me with their lips; but their heart is far from me. [Matthew 15 : 05 - 08]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து,

* உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.

* மாயக்காரரே, உங்களைக்குறித்து:

* இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; [மத்தேயு 15 : 05 - 08]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Monday, March 16, 2009

March 17 [ மத்தேயு Matthew 15 : 01 - 04]

'
IN English :-
''''''''''''''''''''''"

* Then came to Jesus scribes and Pharisees, which were of Jerusalem, saying,

* Why do thy disciples transgress the tradition of the elders? for they wash not their hands when they eat bread.

* But he answered and said unto them, Why do ye also transgress the commandment of God by your tradition?

* For God commanded, saying, Honour thy father and mother: and, He that curseth father or mother, let him die the death. [Matthew 15 : 01 - 04 ]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அப்பொழுது எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:

* உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.

* அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?

* உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்ப்பித்திருக்கிறாரே. [மத்தேயு 15 : 01 - 04 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Sunday, March 15, 2009

March 16 [ மத்தேயு Matthew 14 : 34 - 36]

'
IN English :-
''''''''''''''''''''''"

* And when they were gone over, they came into the land of Gennesaret.

* And when the men of that place had knowledge of him, they sent out into all that country round about, and brought unto him all that were diseased;

* And besought him that they might only touch the hem of his garment: and as many as touched were made perfectly whole. [Matthew 14 : 34 - 36 ]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள்.

* அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து,

* அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள். [மத்தேயு 14 : 34 - 36 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Saturday, March 14, 2009

March 15 [ மத்தேயு Matthew 14 : 30 - 33]

'
IN English :-
''''''''''''''''''''''"

* But when he saw the wind boisterous, he was afraid; and beginning to sink, he cried, saying, Lord, save me.

* And immediately Jesus stretched forth his hand, and caught him, and said unto him, O thou of little faith, wherefore didst thou doubt?

* And when they were come into the ship, the wind ceased.

* Then they that were in the ship came and worshipped him, saying, Of a truth thou art the Son of God. [Matthew 14 : 30 - 33 ]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான்.

* உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.

* அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.

* அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். [மத்தேயு 14 : 30 - 33]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Friday, March 13, 2009

March 14 [ மத்தேயு Matthew 14 : 24 - 29]

'
IN English :-
''''''''''''''''''''''"

* But the ship was now in the midst of the sea, tossed with waves: for the wind was contrary.

* And in the fourth watch of the night Jesus went unto them, walking on the sea.

* And when the disciples saw him walking on the sea, they were troubled, saying, It is a spirit; and they cried out for fear.

* But straightway Jesus spake unto them, saying, Be of good cheer; it is I; be not afraid.

* And Peter answered him and said, Lord, if it be thou, bid me come unto thee on the water.

* And he said, Come. And when Peter was come down out of the ship, he walked on the water, to go to Jesus.[ Matthew 14:24-29 ]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அதற்குள்ளாக படவு நடுகடலிலே சேர்ந்தது, எதிர்காற்றாயிருந்த படியால் அலைகளினால் அலைவுபட்டது.

* இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்தார்.

* அவர் கடலின்மேல் நடக்கிறதை சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.

* உடனே இயேசு அவர்களோடே பேசி, திடன் கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.

* பேதுரு அவரை நோக்கி, ஆண்டவரே.! நீரேயானால் நான் ஜலத்தின் மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான்.

* அதற்கு அவர்; வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான். [ மத்தேயு 14:24-29 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Thursday, March 12, 2009

March 13 [ மத்தேயு Matthew 14 : 20 - 23]

'
IN English :-
''''''''''''''''''''''"

* And they did all eat, and were filled: and they took up of the fragments that remained twelve baskets full.

* And they that had eaten were about five thousand men, beside women and children.

* And straightway Jesus constrained his disciples to get into a ship, and to go before him unto the other side, while he sent the multitudes away.

* And when he had sent the multitudes away, he went up into a mountain apart to pray: and when the evening was come, he was there alone. [Matthew 14 : 20 - 23]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.

* ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.

* இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

* அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது, அங்கே தனிமையாயிருந்தார். [மத்தேயு 14 : 20 - 23]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Wednesday, March 11, 2009

March 12 [ மத்தேயு Matthew 14 : 16 - 19 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* But Jesus said unto them, They need not depart; give ye them to eat.

* And they say unto him, We have here but five loaves, and two fishes.

* He said, Bring them hither to me.

* And he commanded the multitude to sit down on the grass, and took the five loaves, and the two fishes, and looking up to heaven, he blessed, and brake, and gave the loaves to his disciples, and the disciples to the multitude. [Matthew 14 : 16 - 19]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை, நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்.

* அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.

* அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

* அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தர்கள். [மத்தேயு 14 : 16 - 19]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Tuesday, March 10, 2009

March 11 [ மத்தேயு Matthew 14 : 13 - 15 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* When Jesus heard of it, he departed thence by ship into a desert place apart: and when the people had heard thereof, they followed him on foot out of the cities.

* And Jesus went forth, and saw a great multitude, and was moved with compassion toward them, and he healed their sick.

* And when it was evening, his disciples came to him, saying, This is a desert place, and the time is now past; send the multitude away, that they may go into the villages, and buy themselves victuals. [Matthew 14 : 13 - 15]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஒரு இடத்திற்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்.

* இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தவர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.

* சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்குப் போஜனப்பதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். [மத்தேயு 14 : 13 - 15]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Monday, March 9, 2009

March 10 [ மத்தேயு Matthew 14 : 09 - 12 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* And the king was sorry: nevertheless for the oath's sake, and them which sat with him at meat, he commanded it to be given her.

* And he sent, and beheaded John in the prison.

* And his head was brought in a charger, and given to the damsel: and she brought it to her mother.

* And his disciples came, and took up the body, and buried it, and went and told Jesus. [Matthew 14 : 09 - 12]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளையிட்டு,

* ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.

* அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.

* அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம் பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள். [மத்தேயு 14 : 09 - 12]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Sunday, March 8, 2009

March 09 [ மத்தேயு Matthew 14 : 05 - 08 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* And when he would have put him to death, he feared the multitude, because they counted him as a prophet.

* But when Herod's birthday was kept, the daughter of Herodias danced before them, and pleased Herod.

* Whereupon he promised with an oath to give her whatsoever she would ask.

* And she, being before instructed of her mother, said, Give me here John Baptist's head in a charger. [Matthew 14 : 05 - 08]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.

* அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி எரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.

* அதினிமித்தம் அவன்: நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.

* அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே; யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள். [மத்தேயு 14 : 05 - 08]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Saturday, March 7, 2009

March 08 [ மத்தேயு Matthew 14 : 01 - 04 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

*At that time Herod the tetrarch heard of the fame of Jesus,

* And said unto his servants, This is John the Baptist; he is risen from the dead; and therefore mighty works do shew forth themselves in him.

* For Herod had laid hold on John, and bound him, and put him in prison for Herodias' sake, his brother Philip's wife.

* For John said unto him, It is not lawful for thee to have her. [Matthew 14 : 01 - 04]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு,

* தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.

* ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.

* ஏனெனில்: நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லிருந்தான். [மத்தேயு 14 : 01 - 04]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Friday, March 6, 2009

March 07 [ மத்தேயு Matthew 13 : 53 - 58 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

*And it came to pass, that when Jesus had finished these parables, he departed thence.

* And when he was come into his own country, he taught them in their synagogue, insomuch that they were astonished, and said, Whence hath this man this wisdom, and these mighty works?

* Is not this the carpenter's son? is not his mother called Mary? and his brethren, James, and Joses, and Simon, and Judas?

* And his sisters, are they not all with us? Whence then hath this man all these things?

* And they were offended in him. But Jesus said unto them, A prophet is not without honour, save in his own country, and in his own house.

* And he did not many mighty works there because of their unbelief. [Matthew 13 : 53 - 58]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு,

* தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?

* இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?

* இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,

* அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.

* அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. [மத்தேயு 13 : 53 - 58]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Thursday, March 5, 2009

March 06 [ மத்தேயு Matthew 13 : 51 - 52 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* Jesus saith unto them, Have ye understood all these things? They say unto him, Yea, Lord.

* Then said he unto them, Therefore every scribe which is instructed unto the kingdom of heaven is like unto a man that is an householder, which bringeth forth out of his treasure things new and old. [Matthew 13 : 51 - 52]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* பின்பு இயேசு அவர்களை நோக்கி, இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே என்றார்கள்.

* அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில், உபதேசிக்கப்பட்டுத், தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார். [மத்தேயு 13 : 51 - 52]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Wednesday, March 4, 2009

March 05 [ மத்தேயு Matthew 13 : 47 - 50 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* Again, the kingdom of heaven is like unto a net, that was cast into the sea, and gathered of every kind:

* Which, when it was full, they drew to shore, and sat down, and gathered the good into vessels, but cast the bad away.

* So shall it be at the end of the world: the angels shall come forth, and sever the wicked from among the just,

* And shall cast them into the furnace of fire: there shall be wailing and gnashing of teeth. [Matthew 13 : 47 - 50]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.

* அது நிறைந்தபோது, அதை கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.

* இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,

* அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார். [மத்தேயு 13 : 47 - 50]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Tuesday, March 3, 2009

March 04 [ மத்தேயு Matthew 13 : 44 - 46 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* Again, the kingdom of heaven is like unto treasure hid in a field; the which when a man hath found, he hideth, and for joy thereof goeth and selleth all that he hath, and buyeth that field.

* Again, the kingdom of heaven is like unto a merchant man, seeking goodly pearls:

* Who, when he had found one pearl of great price, went and sold all that he had, and bought it. [Matthew 13 : 44 - 46]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.

* மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துகளைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.

* அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான். [மத்தேயு 13 : 44 - 46]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

March 03 [ மத்தேயு Matthew 13 : 40 - 43 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* As therefore the tares are gathered and burned in the fire; so shall it be in the end of this world.

* The Son of man shall send forth his angels, and they shall gather out of his kingdom all things that offend, and them which do iniquity;

* And shall cast them into a furnace of fire: there shall be wailing and gnashing of teeth.

* Then shall the righteous shine forth as the sun in the kingdom of their Father. Who hath ears to hear, let him hear. [ Matthew 13 : 40 - 43 ]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.

* மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,

* அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

* அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போல பிரகாசிப்பார்கள். கேட்கிறதுகுக் காதுள்ளவன் கேட்கக்கடவன். [மத்தேயு 13 : 40 - 43]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Sunday, March 1, 2009

March 02 [ மத்தேயு Matthew 13 : 35 - 39 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* That it might be fulfilled which was spoken by the prophet, saying, I will open my mouth in parables; I will utter things which have been kept secret from the foundation of the world.

* Then Jesus sent the multitude away, and went into the house: and his disciples came unto him, saying, Declare unto us the parable of the tares of the field.

* He answered and said unto them, He that soweth the good seed is the Son of man;

* The field is the world; the good seed are the children of the kingdom; but the tares are the children of the wicked one;

* The enemy that sowed them is the devil; the harvest is the end of the world; and the reapers are the angels. [ Matthew 13 : 35 - 39 ]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

* அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.

* அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்;

* நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;

* அவர்களை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். [மத்தேயு 13 : 35 - 39]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

March 01 [ மத்தேயு Matthew 13 : 31 - 34 ]

'
IN English :-
''''''''''''''''''''''"

* Another parable put he forth unto them, saying, The kingdom of heaven is like to a grain of mustard seed, which a man took, and sowed in his field:

* Which indeed is the least of all seeds: but when it is grown, it is the greatest among herbs, and becometh a tree, so that the birds of the air come and lodge in the branches thereof.

* Another parable spake he unto them; The kingdom of heaven is like unto leaven, which a woman took, and hid in three measures of meal, till the whole was leavened.

* All these things spake Jesus unto the multitude in parables; and without a parable spake he not unto them: [ Matthew 13 : 31 - 34 ]

( GOD BLESS YOU )

*******************************************************************************
.
In Tamil:-
=======

* வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.

* அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.

* வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தால் என்றார்.

* இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. [மத்தேயு 13 : 31 - 34]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************